Saturday, April 10, 2010

எதிரொலி கேட்டு...



தனிமையை விழுங்கி பரிகசிக்கும் நினைவுகள்,
நித்தமும் நம்பிக்கையுடன் உனக்கான எதிர்நோக்கல்...

வழிபோக்கர்களான எண்ணோட்டங்களினூடே,
ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் நழுவும் சிறு துளிகள்..

தீயினின் நடுவே வாடும் மலராய் மனமும்,
மெல்ல கருகும் சருகாய் நம்பிக்கை துளிரும்.....

கட்டுக்கடங்கா காட்டு வெள்ளமென துளிகளினூடே,
திகைத்து நின்றேன் ரணமான குரலின் எதிரொலி கேட்டு...!

Tuesday, April 6, 2010

பிரியமான தோழி..!





உடைந்து போனால்
தன்னிலை மறந்து
ஓடோடி வருவாள்..!

தோல்வியால் சரிந்தால்
தோல் கொடுத்து
மனம் தேற்றுவாள்..!

விழும்முன் எச்சரிப்பாள்
விழுந்த பின்
தாங்கிப் பிடிப்பாள்..!

கண்ணிமைக்கும் நேரத்தில்
(நம்பிக்)கை கொடுத்து
ஏற்றி விடுவாள்..!

குழம்பி நின்ற
சமயத்தில் துணிவு
தந்து துயர் துடைப்பாள்..!

காணாமல் போனால்
தன் கண்ணீரால்
கண்டெடுப்பாள்..!

சிறுபிள்ளையாய்
அடம் பிடித்தால்
அடியும் கொடுப்பாள்..!


அவள் என் பிரியமான தோழி தான்..!

நீ..! நான்..! நிலா..! ;)




என்னை கண்ட
மகிழ்ச்சியில்
வளர்பிறையாய் நீ..!

உன்னை கானா
சோகத்தில்
தேய்பிறையாய் நான்..!

பகல் பொழுதில்
கண்களுக்கு
அகப்படாமல் நீ..!

இரவு முழுதும்
உனை பார்த்து
ரசிக்கும் நான்..!

அம்மாவிடம் நிலா
சோறு கேட்டு
அடம்பிடிக்கும் நீ..!

நிலா நிலா ஓடிவா
என்று ஓயாமல்
உன் நினைவோடு நான்..!

இப்படி எதிரும் புதிருமாய்
சிந்திக்கும் நம்மை கண்டு
அமாவாசையில் ஒளிந்திருந்து
கேலி செய்யும் நிலா ..........! ;)

Thursday, April 1, 2010

மௌனித்த மனம் :)



சோர்வு கலந்த
குரல்கள் கேட்டு
மௌனித்த மனம்

அரவணைக்க தோள்கள்
இருந்தும் தனிமை
வேண்டும் உள்ளம்

காணத் துடிக்கும்
விழிகளுக்கு
ஆறுதலான துளிகள்

ஆழ்ந்த சுவாசத்தினூடே
அமைதியும் செல்ல
அதையே விரும்பும் இதயம்

ஆழ்மனத்தின் ஓரத்தில்
சிறு நம்பிக்கை துளிர்
விட்டு புன்னகைக்க

இதுவரை மௌனித்த
மனம் எழுந்து நின்று அடுத்த
பயணத்திற்கு ஆயத்தமானது..!

Tuesday, March 30, 2010

வார்த்தைகளின்றி...!


கண்ணிருந்தும்
பார்வையில்லா
ஒரு வாழ்க்கை.!


பல நேரங்களில்
குரல் கேட்டு
குதூகலிக்கும்

உள்மனம்

சில நேரங்களில்
மட்டும் ஏனோ
குமுறி அழும்.!


குரல் கேட்டு
சில துளி
எட்டிப் பார்க்க

மறைக்க முயன்றும்
முடியாமல்
தோற்றுப் போனேன்

ரணமான மனதோடும்
வறண்ட நாவோடும்
பதில் கூற வார்த்தைகளின்றி...!

Monday, March 29, 2010

கடன்..!




முகம் தெரியா
முன்னிரவில்
முப்பது நிமிடம்

குளிர்ந்த காற்றோடு
நிசப்தத்தின் அரவணைப்பில்
நிழல்களின் சங்கமம்

நிலவொளியின்
நீளும் கதகதப்பில்
நம் தனிமை (நீ, நான் & நிலா)

மௌனமான
மனதின் ஓரம்
சிறு சலனம்

எப்படி கேட்பது
என்று ஒரு வித
தடுமாற்றம்

நீயே கேட்பாய்
என்று ஒரு
எதிர்பார்ப்பு

கடைசியில் மௌனம்
கலைத்து நானே
படபடத்து ஆரம்பித்தேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஒரு நூறுரூபாய்
கைமாற்று
வேண்டும் என்று

இருந்தும்
உன் மௌனம்
கலையவில்லை

ஒருவழியாக
சிறுது நேரத்தில்
உன் பதில்

கடன்
நம் காதலை
முறிக்கும் என்று..!

Monday, March 22, 2010

கண்டும்காணாமல் கண்சிமிட்டுகிறது ;)


மண்ணில் மகிழ்ச்சி ஒன்றே
உயர்ந்த குறிக்கோள் என
வாழ்ந்த வாழ்க்கையின்
இடையில் உணர்த்தினாய்..!

நான் அறியா என்னுள்
அகிம்சையாய் அடம்பிடித்து
பிரிவின் கொடுமையை
வாழ்வின் இறுதிவரை..!

மிக அருகில் இருந்தும்
அரவணைக்க தவரியவனை
வெகு தொலைவில் நின்று
ரசிக்க வைத்தாய் உன் அன்பால்..!

ஆட்டம் போட்ட கால்களும்
அலுத்துப்போய் அனுதினமும்
உன் அன்பை எதிர்நோக்கி
அமைதியாய் தனிமையில்..!

தொல்லையாய் நினைத்த
உன் நினைவு கூட இன்று ஏனோ
கும்மாளமாய் குதூகலிக்கிறது
அருகில் உன் வரவை எண்ணி..!

இப்பொழுது மட்டும் ஏனோ
தெரியவில்லை காரணம் அறியா
உள் மனமும் கண்டும்காணாமல்
கண்சிமிட்டுகிறது உன் பெயர் சொல்லி..!

கிளி..!



அலைபேசியில் அறிமுகமான
உன்னை அழகாய்
அலைபேசியில் பதிந்தேன்
குயில் பெயரில்

நீண்ட நாள் கழித்து
குயிலின் குரல்
கேட்க ஆவலாய்
அழைத்தேன் இருமுறை

இருமுறையும் தோற்றேன்
ஒரு கிளியிடம்

"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்
தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்,
தயவுசெய்து சிறிது நேரம் கழித்து தொடர்புகொள்ளவும்"


என்று..!

Sunday, March 21, 2010

எப்படி இப்படி..? :D



மலர்களில் வாசனை வீசும்
தெரிந்த ஒன்று தான்
அனைத்து மலர்களிலும் உன்
வாசனை எப்படி..?

கற்பனையில் கவிதை வரும்
அறிந்த ஒன்று தான்
உன்னை நினைக்கும்போது
கவிதை எப்படி..?

மலர்களை தேடி வண்டுவரும்
இயற்கையான ஒன்று தான்
எங்கு சென்றாலும் உன்னை தேடி
வண்டுகள் எப்படி..?

இனிப்பை தேடி எறும்பு வரும்
வழக்கமான ஒன்று தான்
உறக்கத்தில் உன் இதழ் தேடி
எறும்புகள் எப்படி..?

பொதுவாக தனிமை வெறுப்பவன்
பழக்கமான ஒன்று தான்
தற்சமயம் உன் நினைவுகளுடன்
தனிமையில் எப்படி..?

கண்விழித்ததும் உள்ளங்கை பார்ப்பேன்
பழகிவிட்ட ஒன்று தான்
கண்விழித்ததும் உன் புகைப்படம்
எப்படி இப்படி..? :D

கார்மேகம் கண்டு
மயில் நடனமாடும்
உன் கார்கூந்தல் கண்டும்
எப்படி இப்படி?

தமிழை நேசித்தால்
தானே கவிதை வரும்
உன் பெயரை வாசித்தால்
எப்படி இப்படி..?

Friday, March 19, 2010

அம்மா..! :(


பள்ளம் தெரியாமல்
தடுக்கி விழுந்தேன்
தடுமாறி நின்றாய்...!

என் சிறு துளிக்கு
கூட உன் உயிர்
வலி கொண்டாய்...!

ஏனோ உனைப்போல்
இயல்பாய் அன்பு
காட்ட தெரியவில்லை...!

வேண்டுமானால் நீ
தந்த இவ் உடலையும்
உயிரையும் எடுத்துக்கொள்...!

உயிர் உள்ளவரை
உன்மேல் என் அன்பு
மட்டும் மாறாது அம்மா...!

உண்மை தான் :)


மழலை மொழியில்
உலகை மறந்தேன்..!

பிஞ்சு கால்கள்
பட்டதும் பூரித்தேன்..!

மென்மையான ஸ்பரிசம்
தொட்டு மனம் மகிழ்ந்தேன்..!

கள்ளமில்லா சிரிப்பில்
கடவுளை கண்டேன்..!

என்று நீ சொன்ன வரிகள்
உண்மை தான் அம்மா..!

இன்று தாயானதால்
அனைத்தும் உணர்ந்தேன்..!

Sunday, March 14, 2010

இயல்பாய் சில வரிகள்..!





மிக அருகில் என்
வரவை கண்ட
உன் வெட்கம்

நாணல் மேல் அதிகாலை
பனித்துளிப் போல்

சிறிது சிறிதாய்
சிந்தும் அவ்வழகை
வர்ணிக்க வார்த்தைகளில்லை..!

Thursday, March 4, 2010

துளித்துளியாய் நழுவுதடி... :(


மெல்ல உருகும்
மெழுகை போல்
உன் மௌனம்
கலந்த விழியால்
உயிரும் உருகுதடி...

சிறிது சிறிதாய்
சிறை பிடித்தாய்
சிந்தனை செய்தால்
சிலிர்த்து போகிறது
உன்னோடு என் நாட்கள்...

மரத்தின் நிழலில்
இளைப்பறி செல்லும்
சராசரி வழிப்போக்கனாய்
கண்முன்னே கடந்து சென்றது
நாம் கொண்ட காதல்...

சிறு சிறு சண்டைகளும்
சீரான புன்னகையும்
சிற்றூந்து பயணமும்
சிதிலமடைந்த காதலால்
துளித்துளியாய் நழுவுதடி... :(

Thursday, February 25, 2010

கலை...!




வடக்கே பிறந்து..! தெற்கே வாழும்..!
பரத முனியின் ஆயுதமே..! பரதமே..!
பாவத்திலே பிறந்து ரத்தத்திலே வளர்ந்து
திராவிட கலைகளை வடுதெரியாமல் அழித்துவிட்டு
பூர்வீகம் நீயே என்று (நா)கூசாமல் பூசுகிறாய்
என்று தெளியும் இம்மண்ணின் மைந்தர்களுக்கு
உன் மேல் கொண்ட போதை..!

பரதம்..!





நாட்டியத்தின் நயம் சொல்ல
ஒரு நாள் போதுமா !

தில்லைக்கோர் நடராஜன்
திக்கெங்கும் அவன் ராஜன் !

ரசத்துடன் ராகமும் தாளமும்
ஒருங்கிணைத்து பிறப்பது
தான் நாட்டியம் !

உள்ளத்தால் உடலோடு நளினம்
ஒரு சேர கலப்பது தான்
பரதத்தின் அழகு !

பெண்ணை ஆணாக்குவதும்
ஆணை பெண்ணாக்குவதும்
நாட்டியத்தின் நியதி !

பரதநாட்டியம்..!


பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல்,

ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.


தோழர்களே இந்த கலையை பற்றி என் பார்வையில் தங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்..!

நன்றி





அரங்கேற்றம்...!


பாதத்தில் சலங்கை கட்டி
பட்டாடை தான் உடுத்தி
அரிதாரம் பூசி அவதாரமும் ஆகி
நல்லருள் வேண்டி நாட்டியம் ஆட
நம்பி வந்த எனை காப்பாய் தில்லையம்பலனே..!