Monday, March 22, 2010

கிளி..!



அலைபேசியில் அறிமுகமான
உன்னை அழகாய்
அலைபேசியில் பதிந்தேன்
குயில் பெயரில்

நீண்ட நாள் கழித்து
குயிலின் குரல்
கேட்க ஆவலாய்
அழைத்தேன் இருமுறை

இருமுறையும் தோற்றேன்
ஒரு கிளியிடம்

"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்
தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்,
தயவுசெய்து சிறிது நேரம் கழித்து தொடர்புகொள்ளவும்"


என்று..!

2 comments:

  1. ha ha ha ... :)

    நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்
    தற்சமயம் வேறொருவருடன் தொடர்பில் எ உள்ளார்,
    தயவுசெய்து சிறிது நேரம் கழித்து தொடர்புகொள்ளவும்"

    இப்படி வராம இருந்ததே அது வரைக்கும் சந்தோசம்... :D

    ReplyDelete