Tuesday, March 30, 2010

வார்த்தைகளின்றி...!


கண்ணிருந்தும்
பார்வையில்லா
ஒரு வாழ்க்கை.!


பல நேரங்களில்
குரல் கேட்டு
குதூகலிக்கும்

உள்மனம்

சில நேரங்களில்
மட்டும் ஏனோ
குமுறி அழும்.!


குரல் கேட்டு
சில துளி
எட்டிப் பார்க்க

மறைக்க முயன்றும்
முடியாமல்
தோற்றுப் போனேன்

ரணமான மனதோடும்
வறண்ட நாவோடும்
பதில் கூற வார்த்தைகளின்றி...!

Monday, March 29, 2010

கடன்..!




முகம் தெரியா
முன்னிரவில்
முப்பது நிமிடம்

குளிர்ந்த காற்றோடு
நிசப்தத்தின் அரவணைப்பில்
நிழல்களின் சங்கமம்

நிலவொளியின்
நீளும் கதகதப்பில்
நம் தனிமை (நீ, நான் & நிலா)

மௌனமான
மனதின் ஓரம்
சிறு சலனம்

எப்படி கேட்பது
என்று ஒரு வித
தடுமாற்றம்

நீயே கேட்பாய்
என்று ஒரு
எதிர்பார்ப்பு

கடைசியில் மௌனம்
கலைத்து நானே
படபடத்து ஆரம்பித்தேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஒரு நூறுரூபாய்
கைமாற்று
வேண்டும் என்று

இருந்தும்
உன் மௌனம்
கலையவில்லை

ஒருவழியாக
சிறுது நேரத்தில்
உன் பதில்

கடன்
நம் காதலை
முறிக்கும் என்று..!

Monday, March 22, 2010

கண்டும்காணாமல் கண்சிமிட்டுகிறது ;)


மண்ணில் மகிழ்ச்சி ஒன்றே
உயர்ந்த குறிக்கோள் என
வாழ்ந்த வாழ்க்கையின்
இடையில் உணர்த்தினாய்..!

நான் அறியா என்னுள்
அகிம்சையாய் அடம்பிடித்து
பிரிவின் கொடுமையை
வாழ்வின் இறுதிவரை..!

மிக அருகில் இருந்தும்
அரவணைக்க தவரியவனை
வெகு தொலைவில் நின்று
ரசிக்க வைத்தாய் உன் அன்பால்..!

ஆட்டம் போட்ட கால்களும்
அலுத்துப்போய் அனுதினமும்
உன் அன்பை எதிர்நோக்கி
அமைதியாய் தனிமையில்..!

தொல்லையாய் நினைத்த
உன் நினைவு கூட இன்று ஏனோ
கும்மாளமாய் குதூகலிக்கிறது
அருகில் உன் வரவை எண்ணி..!

இப்பொழுது மட்டும் ஏனோ
தெரியவில்லை காரணம் அறியா
உள் மனமும் கண்டும்காணாமல்
கண்சிமிட்டுகிறது உன் பெயர் சொல்லி..!

கிளி..!



அலைபேசியில் அறிமுகமான
உன்னை அழகாய்
அலைபேசியில் பதிந்தேன்
குயில் பெயரில்

நீண்ட நாள் கழித்து
குயிலின் குரல்
கேட்க ஆவலாய்
அழைத்தேன் இருமுறை

இருமுறையும் தோற்றேன்
ஒரு கிளியிடம்

"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்
தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்,
தயவுசெய்து சிறிது நேரம் கழித்து தொடர்புகொள்ளவும்"


என்று..!

Sunday, March 21, 2010

எப்படி இப்படி..? :D



மலர்களில் வாசனை வீசும்
தெரிந்த ஒன்று தான்
அனைத்து மலர்களிலும் உன்
வாசனை எப்படி..?

கற்பனையில் கவிதை வரும்
அறிந்த ஒன்று தான்
உன்னை நினைக்கும்போது
கவிதை எப்படி..?

மலர்களை தேடி வண்டுவரும்
இயற்கையான ஒன்று தான்
எங்கு சென்றாலும் உன்னை தேடி
வண்டுகள் எப்படி..?

இனிப்பை தேடி எறும்பு வரும்
வழக்கமான ஒன்று தான்
உறக்கத்தில் உன் இதழ் தேடி
எறும்புகள் எப்படி..?

பொதுவாக தனிமை வெறுப்பவன்
பழக்கமான ஒன்று தான்
தற்சமயம் உன் நினைவுகளுடன்
தனிமையில் எப்படி..?

கண்விழித்ததும் உள்ளங்கை பார்ப்பேன்
பழகிவிட்ட ஒன்று தான்
கண்விழித்ததும் உன் புகைப்படம்
எப்படி இப்படி..? :D

கார்மேகம் கண்டு
மயில் நடனமாடும்
உன் கார்கூந்தல் கண்டும்
எப்படி இப்படி?

தமிழை நேசித்தால்
தானே கவிதை வரும்
உன் பெயரை வாசித்தால்
எப்படி இப்படி..?

Friday, March 19, 2010

அம்மா..! :(


பள்ளம் தெரியாமல்
தடுக்கி விழுந்தேன்
தடுமாறி நின்றாய்...!

என் சிறு துளிக்கு
கூட உன் உயிர்
வலி கொண்டாய்...!

ஏனோ உனைப்போல்
இயல்பாய் அன்பு
காட்ட தெரியவில்லை...!

வேண்டுமானால் நீ
தந்த இவ் உடலையும்
உயிரையும் எடுத்துக்கொள்...!

உயிர் உள்ளவரை
உன்மேல் என் அன்பு
மட்டும் மாறாது அம்மா...!

உண்மை தான் :)


மழலை மொழியில்
உலகை மறந்தேன்..!

பிஞ்சு கால்கள்
பட்டதும் பூரித்தேன்..!

மென்மையான ஸ்பரிசம்
தொட்டு மனம் மகிழ்ந்தேன்..!

கள்ளமில்லா சிரிப்பில்
கடவுளை கண்டேன்..!

என்று நீ சொன்ன வரிகள்
உண்மை தான் அம்மா..!

இன்று தாயானதால்
அனைத்தும் உணர்ந்தேன்..!

Sunday, March 14, 2010

இயல்பாய் சில வரிகள்..!





மிக அருகில் என்
வரவை கண்ட
உன் வெட்கம்

நாணல் மேல் அதிகாலை
பனித்துளிப் போல்

சிறிது சிறிதாய்
சிந்தும் அவ்வழகை
வர்ணிக்க வார்த்தைகளில்லை..!

Thursday, March 4, 2010

துளித்துளியாய் நழுவுதடி... :(


மெல்ல உருகும்
மெழுகை போல்
உன் மௌனம்
கலந்த விழியால்
உயிரும் உருகுதடி...

சிறிது சிறிதாய்
சிறை பிடித்தாய்
சிந்தனை செய்தால்
சிலிர்த்து போகிறது
உன்னோடு என் நாட்கள்...

மரத்தின் நிழலில்
இளைப்பறி செல்லும்
சராசரி வழிப்போக்கனாய்
கண்முன்னே கடந்து சென்றது
நாம் கொண்ட காதல்...

சிறு சிறு சண்டைகளும்
சீரான புன்னகையும்
சிற்றூந்து பயணமும்
சிதிலமடைந்த காதலால்
துளித்துளியாய் நழுவுதடி... :(