Monday, December 28, 2009

மௌன விரதம்..!



உன்னுடன் பேசாத
அனைத்து நாட்களும்
"மௌன விரதம்" தான்


உன் பெயர் மட்டும் உச்சரித்து..!!

Saturday, December 26, 2009

மதங்களை விட்டு மனிதர்களாக...!


டிசம்பர் 26 ஆழிப்பேரலையால் நிலைகுலைந்து போன
பல்லாயிரகணக்கான மக்களில் நானும் ஒருவன்..!

அன்று காலை பள்ளி விடுமுறையால் கடற்க்கரை ஓரம்
விளையாடிய குழந்தைகளுக்கு தெரியவில்லை..!

அது தான் தங்கள் கடைசி விளையாட்டு என்றும் மரணம்
தன்னுடன் விளையாட காத்திருக்கிறது என்றும்..!

ஐந்தே நிமிடத்தில் அணைத்தும் முடிந்தது அடுத்த சிலமணி
நேரங்களில் சடலம் தேடும் பணியில் நானும் ஒருவன்..!

முள்செடிகளில் சிக்கிக் கிடந்த சடலங்களின் நடுவே நான்
மனதை அடக்க முடிந்த எனக்கு கண்ணீரை ஏனோ முடியவில்லை..!

வீதியெங்கும் கண்ணீர் குரல் என் மகன் பிழைத்திருப்பானா என்பது
போய் கிடைத்திருப்பானா என்ற பெற்றோர்களின் பிரார்த்தனை..!

அந்த சமயத்திலும் தங்கள் கடமையில் கண்ணாக இருந்து கரை
ஒதுங்கிய சடலங்களில் நகைகளை களவாடும் காட்டுமிராண்டிகள்..!

இறப்பில் மட்டும் ஒன்றுகூடிய ஊர் மக்கள் மதங்களை விட்டு மனிதர்களாக...!

Tuesday, December 22, 2009

மழைக்காலம்....!


பருவமழையால் பள்ளி விடுமுறை
நம் தொல்லைகள் தாங்காமல்
அன்னையால் வீட்டின் கதவுகள்
பூட்டப்பட்டு சிறைபட்டோம்
என்று வேதனைப்பட்ட நாட்கள்

யாரும் இல்ல சமயத்தில்
வீட்டின் சன்னல் கம்பிகள் வழியே
மழையுடன் கை குலுக்கி மகிழ்ந்து
வீதியில் போவோரை வேடிக்கை பார்த்தோம்

சிறிது நேரத்தில் அறையில்
கட்டிலில் தலையனை போர்வைக்காக
அண்ணனுடன் சண்டையிட்டு
அன்னையிடம் அடியும் வாங்கி

அழுது தீர்த்து களைத்து போய்
உணவு உண்ண அடம் பிடித்து
ஒரு வழியாய் சமாதானம் அடைந்து
ஊட்டிய உணவை உண்டு முடித்து

இடை விடாத மழையின் நடுவே
குளிரும் மழையின் சாரலில்
மழைநீர் தேங்கி நிற்கும் முற்றத்தில்
காகித கப்பலிட்டு மனம் மகிழ்ந்தோம்

கத்திக்கப்பல், பறக்கும்க்கப்பல்,
புகைக்கப்பல், நீர்மூழ்கிக்கப்பல்
என்று நம் சொந்த தயாரிப்பில்
முற்றத்தில் போட்டியிட்டோம்


இனியும் வருமோ அது போல்
ஒரு இனிய மழைக்காலம்....!!

என் ஆதங்கம்..!



உயிர்வாழ காவிரியில் தண்ணீர் கேட்க்கும்
தமிழனுக்கு வற்றிய கண்ணீரே மிச்சம்..!
பகைவனுக்கும் பண்போடு விருந்து வைக்கும்
எம்குலமக்கள் எலிக்கறி உன்னுவதா..?
தொட்டிலில் தூங்கிய எம்குலமக்கள்
வாங்கிய கடனால் தூக்கில் தொங்குவதா..?

பரந்து விரிந்த இந்த பாரத தேசத்தில்
பரதேசிகளாய் எம்குலமக்கள் பட்டினியோடு..!
எம்மக்கள் இரத்தத்தில் ஊர்சுற்றும் ஓநாய்களோ
பரவசமாக வெளிநாட்டில் பழரசத்தோடு..!
கடன்கார கபோதிகளுக்கோ சிகப்பு கம்பளம்
கலங்கி நின்ற தமிழனுக்கோ ஒருமுழ கோவணம்..!

தேசத்தை தாயாக மதிக்கும் எம்குலமக்களிடம்
தேசிய ஒருமைப்பாட்டை நீ அறிவுத்துவதா..!
உங்களுக்கு ஓட்டு போட்ட ஒன்றை தவிர
வேறு என்ன குற்றஞ் செய்தனர் எம்குலமக்கள்..!
நிச்சயம் ஒருநாள் தெரியும் எளியவன் (தமிழன்) துணிந்தால்
எதிர்ப்பவன் எவனும் இப்புவியில் இல்லையென்று..!!

என் புலம்பல்..!


நிம்மதியில்லா வாழ்க்கை
மக்களின் நீண்ட மரண ஓலம்
பினக்குவியல்களுக்கிடையில்
புன்னைகைக்கும் தலைவர்கள்..!

பிணம் தின்னும் கூட்டத்தில்
தமிழின தானைத்தலைவன்
பிள்ளைகளுக்காக ஓடியவன்
பிஞ்சு உயிர்களுக்காக அல்ல..!

கற்பிழக்கும் கன்னியரின்
மதக்கடவுள்கள் எங்கே
முப்பத்து முக்கோடி தேவர்களில்
ஒருவன் கூட இல்லையா..!

தமிழச்சியின் சதை தின்னும்
ஈன சிங்கள ஓநாய்களே
கௌதம புத்தனின் போதனைகள்
உலகத்திற்கு மட்டுமல்ல உனக்கும்..!

தமிழனை தமிழனாக அல்ல
ஒரு சாரசரி மனிதனாக பார்
விரைவில் வருவேன் உன்னை
வதைத்து எம்மக்களை மீட்க்க..!

நினைவு..!



கண்கள் சந்தித்த பொழுதில் இதயம்
இடம் மாறி உயிரும் உடல் மாறி போனதே..!

நின்றால் நடந்தால் கிடந்தால்
நித்தமும் என் நினைவே நீ தானடி..!

தனிமையில் தவிக்கும் என்
மனதை தள்ளி நின்று பார்ப்பதென்ன..!

தீரா காதல் நோய் ஆட்க்கொண்ட
எனை காப்பாற்று சிறு புன்னகையால்..!

என் அருகில் நீ இல்லா இவ்
உலகில் இருக்கவும் விருப்பமில்லை..!

உன் நினைவால் இயங்கும்
உயிரை துறக்கவும் விருப்பமில்லை..!!

நண்பா வா..!


விதியென்று மதியிழந்து தவித்திடாதே
விதியை உன் மதியால் வென்று விழித்திடு..!

எதிரியின் சூழ்ச்சியில் ஏமாந்துவிடாதே
எட்டிபிடித்தால் நிலவும் உன் கையில் எழுந்திடு..!

புண்பட்டு நொந்தாலும் புலம்பாதே
புத்துணர்ச்சியுடன் புதுப் புயல் போல் புறப்படு..!

நின் நிலை நினைத்து நின்றிடாதே
நிச்சயம் ஒருநாள் நிலைத்திடுவாய் நிமிர்ந்திடு..!

என்னவளே..!



உன் முகம் பார்த்திடவே
என் விடியல் விடிகிறதே..!

உன் இதழ்கள் பேசிடவே
என் இதயம் நனைகிறதே..!

உன் பெயரை கேட்டிடவே
என் மனமும் மகிழ்கிறதே..!

உன் சிரிப்பொலி கேட்க்கையிலே
என் கவலை பறக்கிறதே..!

உன் நினைவு வருகையிலே
என் உலகம் மறக்கிறதே..!!

புன்னகை..!


இருண்டு கிடந்த என் வாழ்வை
ஒளிரச்செய்தாய் உன் புன்னகையால்..!!

காதல்..!


இருமனம் இணையும் திருமணத்தில்
முடிவதில்லை உண்மை காதல்..!
இதயத்தில் தோன்றி மரணத்தையும்
வெல்வது தான் உண்மை காதல்..!!

Monday, December 21, 2009

பூநாகம்..!!


பெண்ணே உன்னை பூவென்று எண்ணி
என் இதயத்தில் பூட்டி வைத்தேனடி,
ஆனால் பூவினுள் நாகமாய் இதயத்தில்
உன் நஞ்சை விட்டு சென்றதேனடி..!!

அழகு..!





காதலர்களுக்கு காதல் அழகு,
காதலிக்கும்போது காதலி அழகு..!

தனிமையில் உன் நினைவு அழகு,
தவிக்க வைக்கும் உன் பிரிவும் அழகு..!

வாசிக்கும்போது கவிதை அழகு,
ரசிக்கும்போது கவிஞனும் அழகு..!

திகட்டாத இயற்க்கை அழகு,
அதை படைத்த இறைவனும் அழகு..!

அறிவுக்கு தந்தை அழகு,
அன்பிற்கு அன்னை அழகு..!

தேனினும் இனிய தமிழ் அழகோ அழகு..!!

என் தேடல்..!





பார்த்த முதல் நாளே
காதல் கொண்டேன்
நாள் நட்சத்திரம் பார்த்து
உன்னிடம் சொன்னேன்..!

மானத்தை இழந்தேன்
மன்றாடி வேண்டினேன்
முத்தே மணியே என்றேன்
மானே த்தேனே என்றேன்..!

நீண்ட நாள் கழித்து
அழுது ஓய்ந்தவன்
மீண்டும் நடந்தேன்
காதல் பாதையில்..!

காதலித்தவளை தேடி அல்ல
என்னை காதலிப்பவளை தேடி..!

ஆம் - தோல்வி என்றும்
காதலர்களுக்கு தானே
தவிர காதலுக்கு அல்ல..!!

உலகம்..!



அன்பாய் பேசினேன்
அறிவிலி என்றாள்..!

பாசமாய் பேசினேன்
பைத்தியம் என்றாள்..!

பிரியமாய் பேசினேன்
பித்தன் என்றாள்..!

மனம்திறந்து பேசினேன்
மடையன் என்றாள்..!

பொய் பேசினேன்
அத்தான் என்றாள்..!

(இது தான் உலகம்)

உன் நினைவில்..!


என் பொழுது விடிந்ததும்
மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி
அவளுடன் பேசும் அந்த
சில நிமிடத்தை எண்ணி..!

மின்மடல் பார்த்த உடன்
எல்லையில்லா மகிழ்ச்சி
அவளின் அழகிய பெயரை
அது சுமந்து வருவதால்..!

அலுவலக பணியின் இடையே
சின்னஞ் சிறு சந்தோசம்
அருகில் என் என்னவளின்
ஒரு நிமிட வரவை எண்ணி..!

இன்று எனக்கு தேனீர் கூட
அமுதமாக தெரிகிறது
அவளோடு சேர்ந்து பருகும்
அந்த சில நிமிடம் மட்டும்..!

தினம் இரவு உறக்கம்
தித்திக்கும் தேனாய்
அவள் நினைவுகளை
சுமந்து வரும் கனவுகளுடன்..!

ஏன் என்று என்னை நானே
கேட்டேன் விடையில்லை
விடை தெரிந்தால் நீயாவது
சொல்லடி என் பிரியசகி..!

இடி..!!


வானம் இடி இடிக்க
மேகம் மழைபொழிய
மின்னல் எட்டி பார்க்க..!

சாரல் உன்னை தழுவ
நானோ விலகி நிற்க
நீயோ தலை குனிய..!

நாணம் விட்டு விலகி
நான் உனை அணைக்க
வாராதோ அந்நாள் என் வாழ்விலே..!

சிரிப்பு..!!


அன்று நீ சிரிக்க
என் மனம் பறந்தது..!

இன்று ஊர் சிரிக்க
என் மானம் பறக்கிறது..!

விடுதலை..!


மனதை திருடியதற்கு
உன்னுள் சிறைப்பட்டு
ஆயுள் கைதியாக ஆசை..!

நொடியில் விடுவித்தாய்
மனதிலிருந்து மட்டுமல்ல
இவுலகில் இருந்தும் கூட..!

கவிதை..!!!


அன்பே ஒரு கவிதை எழுத எண்ணி
காத்திருந்தேன் வார்த்தைகளுக்காக
வானம் வசப்பாட்டாலும் உன் நினைவால்
வார்த்தைகள் வசப்படவில்லையடி...!

வெகுநேரம் யோசித்தும் பலன் இல்லை
கிறுக்கினேன் உன் பெயரை கவிதையாக
என்னைத்தவிர யாருக்கும் புரியாத ஒன்று
நீயே என் வாழ்வின் அழியா கவிதை என்று...!

மழை...!


நீ மழையில் நனையாதிருக்க
நான் குடைபிடித்தேன்..!!

மழை விட்டும் நனைந்தேன்
நான் உன் மௌனத்தால்..!!

Wednesday, December 16, 2009

என் பரிசு..!


கண்களால் கவரப்பட்டு
இதயத்தால் ஒன்றாகி
சுய புத்தி இல்லாமல்
சொல் புத்தி கேட்டதால்
பெற்றவரை எதிர்த்து
மற்றவரை நம்பி
உனை கைபிடித்தேன் இன்று
ஏனோ கை கடிக்கிறது மாதக்கடைசி...!

அன்று மகிழ்ந்த மனம்
இன்று ஏனோ கனக்கிறது
வாழ்வே உன்னோடு தான்
என்பது போய் கொஞ்சம்
அவசரப்பட்டு விட்டோமோ என
அடிக்கடி கேட்க்கிறது உள் மனம்...!

பிறந்த வீட்டில் இருந்த வரை
நான் தான் ராணி அனைவருக்கும்
தாங்கி பிடிப்பதிலும் சரி
தவிக்க விடுவதிலும் சரி
இன்று ஏனோ ஆதரவின்றி
எனை தாங்கிப்பிடிக்க ஆளின்றி
தவித்து நின்றேன் தனி மரமாய்...!

இளமையில் இருமனம் இணைவது தான்
திருமணம் என்பதாக நினைத்தேன்
இன்று பெற்றோரால் இணைவது தான்
திருமணம் என்பதை உணர்ந்தேன்
காலம் கடந்த ஞானோதயம்
என் காலம் முடியும் தருவாயில்...!

இது காலம் உள்ள மக்களுக்கு என் கடைசி பரிசு........!

Saturday, December 12, 2009

உன் முகம்..!



தனிமையில் இருக்கையிலே தங்கமே
உன் சிரித்த முகம் மனதிலே தெரியுதே...!

பசிக்கவும் இல்லை உறக்கமும் இல்லை
பாடாய் படுத்துதே பாழாய் போன உன் நினைவு
பார்ப்பவரெல்லாம் கேலி செய்யும் வண்ணம்...!

பக்கத்தில் நின்றவன் கூட முறைக்கின்றான்
உன் பெயர் சொல்லி அவனை அழைத்ததால்...!

கணிப்பொறியின் கடவு சொல் கூட புனிதமானது
என்னை களவாடிய உன் பெயர் வைத்ததால்...!

யாரேனும் கடவு சொல் கேட்டால் மகிழ்ச்சியோடு
உன் பெயரை பலமுறை உதடுகளால் உச்சரிக்கின்றேன்...!

தொலைபேசியில் எனக்கு பதிலாய் தவறி உன் பெயர் சொல்லி
சிரிப்புடன் எனை நானே தலையில் அடித்துக்கொள்கின்றேன்...!

தனிமையில் சிரித்து பேசினேன் உன் நினைவினிலே
உனக்கு என்ன ஆகிட்டு என்று எந்நேரமும் எனை
கேட்க்காத ஆள் இல்லை திட்டாத நாள் இல்லை (உன்னை பற்றி)...!

என்ன சொல்லுவேன் ஒன்றுமே புரியாத அவர்களுக்கு
மனதை திருடிவிட்டாய் என்றா ? அல்லது என்னையே என்றா...?