Thursday, February 25, 2010

கலை...!




வடக்கே பிறந்து..! தெற்கே வாழும்..!
பரத முனியின் ஆயுதமே..! பரதமே..!
பாவத்திலே பிறந்து ரத்தத்திலே வளர்ந்து
திராவிட கலைகளை வடுதெரியாமல் அழித்துவிட்டு
பூர்வீகம் நீயே என்று (நா)கூசாமல் பூசுகிறாய்
என்று தெளியும் இம்மண்ணின் மைந்தர்களுக்கு
உன் மேல் கொண்ட போதை..!

பரதம்..!





நாட்டியத்தின் நயம் சொல்ல
ஒரு நாள் போதுமா !

தில்லைக்கோர் நடராஜன்
திக்கெங்கும் அவன் ராஜன் !

ரசத்துடன் ராகமும் தாளமும்
ஒருங்கிணைத்து பிறப்பது
தான் நாட்டியம் !

உள்ளத்தால் உடலோடு நளினம்
ஒரு சேர கலப்பது தான்
பரதத்தின் அழகு !

பெண்ணை ஆணாக்குவதும்
ஆணை பெண்ணாக்குவதும்
நாட்டியத்தின் நியதி !

பரதநாட்டியம்..!


பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல்,

ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.


தோழர்களே இந்த கலையை பற்றி என் பார்வையில் தங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்..!

நன்றி





அரங்கேற்றம்...!


பாதத்தில் சலங்கை கட்டி
பட்டாடை தான் உடுத்தி
அரிதாரம் பூசி அவதாரமும் ஆகி
நல்லருள் வேண்டி நாட்டியம் ஆட
நம்பி வந்த எனை காப்பாய் தில்லையம்பலனே..!