
மலர்களில் வாசனை வீசும்
தெரிந்த ஒன்று தான்
அனைத்து மலர்களிலும் உன்
வாசனை எப்படி..?
கற்பனையில் கவிதை வரும்
அறிந்த ஒன்று தான்
உன்னை நினைக்கும்போது
கவிதை எப்படி..?
மலர்களை தேடி வண்டுவரும்
இயற்கையான ஒன்று தான்
எங்கு சென்றாலும் உன்னை தேடி
வண்டுகள் எப்படி..?
இனிப்பை தேடி எறும்பு வரும்
வழக்கமான ஒன்று தான்
உறக்கத்தில் உன் இதழ் தேடி
எறும்புகள் எப்படி..?
பொதுவாக தனிமை வெறுப்பவன்
பழக்கமான ஒன்று தான்
தற்சமயம் உன் நினைவுகளுடன்
தனிமையில் எப்படி..?
கண்விழித்ததும் உள்ளங்கை பார்ப்பேன்
பழகிவிட்ட ஒன்று தான்
கண்விழித்ததும் உன் புகைப்படம்
எப்படி இப்படி..? :D
கார்மேகம் கண்டு
மயில் நடனமாடும்
உன் கார்கூந்தல் கண்டும்
எப்படி இப்படி?
தமிழை நேசித்தால்
தானே கவிதை வரும்
உன் பெயரை வாசித்தால்
எப்படி இப்படி..?
No comments:
Post a Comment