
உயிர்வாழ காவிரியில் தண்ணீர் கேட்க்கும்
தமிழனுக்கு வற்றிய கண்ணீரே மிச்சம்..!
பகைவனுக்கும் பண்போடு விருந்து வைக்கும்
எம்குலமக்கள் எலிக்கறி உன்னுவதா..?
தொட்டிலில் தூங்கிய எம்குலமக்கள்
வாங்கிய கடனால் தூக்கில் தொங்குவதா..?
பரந்து விரிந்த இந்த பாரத தேசத்தில்
பரதேசிகளாய் எம்குலமக்கள் பட்டினியோடு..!
எம்மக்கள் இரத்தத்தில் ஊர்சுற்றும் ஓநாய்களோ
பரவசமாக வெளிநாட்டில் பழரசத்தோடு..!
கடன்கார கபோதிகளுக்கோ சிகப்பு கம்பளம்
கலங்கி நின்ற தமிழனுக்கோ ஒருமுழ கோவணம்..!
தேசத்தை தாயாக மதிக்கும் எம்குலமக்களிடம்
தேசிய ஒருமைப்பாட்டை நீ அறிவுத்துவதா..!
உங்களுக்கு ஓட்டு போட்ட ஒன்றை தவிர
வேறு என்ன குற்றஞ் செய்தனர் எம்குலமக்கள்..!
நிச்சயம் ஒருநாள் தெரியும் எளியவன் (தமிழன்) துணிந்தால்
எதிர்ப்பவன் எவனும் இப்புவியில் இல்லையென்று..!!
உலகுக்கே சோறு போட்ட தமிழினம் உயிர் வாழ தண்ணீர் இல்லையாம்
ReplyDeleteஉமது உன்னத வரிகளுக்கு தலை வணக்கம் .