Tuesday, December 22, 2009

நினைவு..!



கண்கள் சந்தித்த பொழுதில் இதயம்
இடம் மாறி உயிரும் உடல் மாறி போனதே..!

நின்றால் நடந்தால் கிடந்தால்
நித்தமும் என் நினைவே நீ தானடி..!

தனிமையில் தவிக்கும் என்
மனதை தள்ளி நின்று பார்ப்பதென்ன..!

தீரா காதல் நோய் ஆட்க்கொண்ட
எனை காப்பாற்று சிறு புன்னகையால்..!

என் அருகில் நீ இல்லா இவ்
உலகில் இருக்கவும் விருப்பமில்லை..!

உன் நினைவால் இயங்கும்
உயிரை துறக்கவும் விருப்பமில்லை..!!

1 comment:

  1. அருமை அண்ணா
    எண்ணங்களின் பிரதிபளிப்பு... :)

    எப்படியோ நல்லா இருந்தா
    சரி தான் அண்ணா ... :-)

    ReplyDelete