
என் பொழுது விடிந்ததும்
மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி
அவளுடன் பேசும் அந்த
சில நிமிடத்தை எண்ணி..!
மின்மடல் பார்த்த உடன்
எல்லையில்லா மகிழ்ச்சி
அவளின் அழகிய பெயரை
அது சுமந்து வருவதால்..!
அலுவலக பணியின் இடையே
சின்னஞ் சிறு சந்தோசம்
அருகில் என் என்னவளின்
ஒரு நிமிட வரவை எண்ணி..!
இன்று எனக்கு தேனீர் கூட
அமுதமாக தெரிகிறது
அவளோடு சேர்ந்து பருகும்
அந்த சில நிமிடம் மட்டும்..!
தினம் இரவு உறக்கம்
தித்திக்கும் தேனாய்
அவள் நினைவுகளை
சுமந்து வரும் கனவுகளுடன்..!
ஏன் என்று என்னை நானே
கேட்டேன் விடையில்லை
விடை தெரிந்தால் நீயாவது
சொல்லடி என் பிரியசகி..!
No comments.. :)
ReplyDeleterite vidunga :D
ReplyDeleteஹ்ம்ம் ஒரு மார்கமா தான் இருக்கீங்க நீங்க ...
ReplyDeleteஅருமை உங்கள் எண்ணங்கள்
கவிதையின் வடிவில் ... :)