Saturday, December 26, 2009

மதங்களை விட்டு மனிதர்களாக...!


டிசம்பர் 26 ஆழிப்பேரலையால் நிலைகுலைந்து போன
பல்லாயிரகணக்கான மக்களில் நானும் ஒருவன்..!

அன்று காலை பள்ளி விடுமுறையால் கடற்க்கரை ஓரம்
விளையாடிய குழந்தைகளுக்கு தெரியவில்லை..!

அது தான் தங்கள் கடைசி விளையாட்டு என்றும் மரணம்
தன்னுடன் விளையாட காத்திருக்கிறது என்றும்..!

ஐந்தே நிமிடத்தில் அணைத்தும் முடிந்தது அடுத்த சிலமணி
நேரங்களில் சடலம் தேடும் பணியில் நானும் ஒருவன்..!

முள்செடிகளில் சிக்கிக் கிடந்த சடலங்களின் நடுவே நான்
மனதை அடக்க முடிந்த எனக்கு கண்ணீரை ஏனோ முடியவில்லை..!

வீதியெங்கும் கண்ணீர் குரல் என் மகன் பிழைத்திருப்பானா என்பது
போய் கிடைத்திருப்பானா என்ற பெற்றோர்களின் பிரார்த்தனை..!

அந்த சமயத்திலும் தங்கள் கடமையில் கண்ணாக இருந்து கரை
ஒதுங்கிய சடலங்களில் நகைகளை களவாடும் காட்டுமிராண்டிகள்..!

இறப்பில் மட்டும் ஒன்றுகூடிய ஊர் மக்கள் மதங்களை விட்டு மனிதர்களாக...!

2 comments:

  1. மனம் கலங்குகிறது நினைக்கும் பொழுதே ...

    ReplyDelete
  2. டிசம்பர் 26 கண்முன் மீண்டும் ! கதறி அழும் கண்களுடன்.

    ReplyDelete