Wednesday, December 16, 2009

என் பரிசு..!


கண்களால் கவரப்பட்டு
இதயத்தால் ஒன்றாகி
சுய புத்தி இல்லாமல்
சொல் புத்தி கேட்டதால்
பெற்றவரை எதிர்த்து
மற்றவரை நம்பி
உனை கைபிடித்தேன் இன்று
ஏனோ கை கடிக்கிறது மாதக்கடைசி...!

அன்று மகிழ்ந்த மனம்
இன்று ஏனோ கனக்கிறது
வாழ்வே உன்னோடு தான்
என்பது போய் கொஞ்சம்
அவசரப்பட்டு விட்டோமோ என
அடிக்கடி கேட்க்கிறது உள் மனம்...!

பிறந்த வீட்டில் இருந்த வரை
நான் தான் ராணி அனைவருக்கும்
தாங்கி பிடிப்பதிலும் சரி
தவிக்க விடுவதிலும் சரி
இன்று ஏனோ ஆதரவின்றி
எனை தாங்கிப்பிடிக்க ஆளின்றி
தவித்து நின்றேன் தனி மரமாய்...!

இளமையில் இருமனம் இணைவது தான்
திருமணம் என்பதாக நினைத்தேன்
இன்று பெற்றோரால் இணைவது தான்
திருமணம் என்பதை உணர்ந்தேன்
காலம் கடந்த ஞானோதயம்
என் காலம் முடியும் தருவாயில்...!

இது காலம் உள்ள மக்களுக்கு என் கடைசி பரிசு........!

7 comments: